87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
Saturday, August 14th, 2021
நாட்டில் 87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை இம்மாத நிறைவிற்குள் ஏற்ற எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வி நடவடிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாவது வாரத்தில் ஆரம்பிக்க இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையில் உறுதியான திகதியை அறிவிக்க முடியாதுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வெளிநாட்டு பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை - சுகாதார அமைச்சு அறி...
கிழக்கில் மூலிகை செடிகளை நடும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்!
|
|
|


