நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்கள் பொலிசார் இடையே முறுகல்!
Friday, August 13th, 2021
நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பெருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒன்றுகூடி கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் போலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் 19 சதவீதமானவர்கள் சிறுவர்கள்!
தடுப்பூசிக்கு பற்றாக்குறை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய பேச்சு!
37 பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டது நுகர்வோர் விவகார அதிகாரசபை!
|
|
|


