திறமையான தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் – சவுதியின் வௌநாட்டு அமைச்சரிடம் அமைச்சர் தினேஷ் கோரிக்கை!

Friday, August 13th, 2021

திறமையான தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குமாறு சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ள இலங்கையின் வெளிவிகஶ்ரீவகார அமைச்சர்   தினேஸ் குணவர்த்தன கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்ப உதவிய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அடெல் பின் அஹமத் அல்-ஜுபைருடனான மெய்நிகர் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது சவூதி அரேபியாவுடனான இருதரப்பு உறவுகளைப் பாராட்டியதுட்ன் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான சாத்தியங்களை எடுத்துரைத்துள்ளார்.

மேலும் 1974 ஆம் ஆண்டுமுதல் இரு நாடுகளும் தூதரக உறவுகளை வலுப்படுத்த எடுத்த முற்போக்கான நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளுக்கு உறவை ஆழப்படுத்தி, விரிவாக்குவதற்காக சவுதி அரச குடும்பம் நல்கிய பங்களிப்புக்களை நினைவு கூர்ந்திருந்தார்.

அத்துடன் இரு நாடுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் உதவியமையை சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் அபிவிருத்தித் துறைகளிலும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்பார்ப்பதாக அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார்.

இதனிடையே சவுதி அரேபியா – இலங்கை இருதரப்புக் கூட்டாண்மைக்கு சவூதி அரேபியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், எதிர்காலத்தில் இலங்கையால் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளில் இருதரப்பு உறவுகளில் மேலும் வாய்ப்புக்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கு சவூதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நெருக்கமாகப் பணியாற்றியமையையும், பல சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் ஆதரித்தமையையும் இரு அமைச்சர்களும் நினைவு கூரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106