பால் உற்பத்தித்துறையை நவீன வசதிகளுடன் மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு – பிரதமர் மஹிந்தவிடம் நியூசிலாந்தின் இலங்கைக்கான முதலாவது தூதுவர் தெரிவிப்பு!

Thursday, August 12th, 2021

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடான நியூசிலாந்து இலங்கையின் பால் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் அறிவை பகிர்ந்து வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே இவ்வாறு தெரிவித்திருந்த அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன், இதற்கு முன்னர் மேற்கொண்ட கலந்துரையாடல் குறித்து நினைவுகூர்ந்த உயர் ஸ்தானிகர் விளையாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை உறுதிப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நட்பு நாடாக நியூசிலாந்து அரசாங்கத்துடன் எதிர்காலத்திலும் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் என்ற ரீதியில் வெற்றிகரமாக சேவையாற்ற எட்வட் அபல்டனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் பேராசிரியர் சீ.எல்..பீரிஸ், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இலங்கைக்கான நியூசிலாந்து பிரதி உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ ட்ரவெலர், முன்னாள் நியூசிலாந்து கொன்சியூலர் சேனக த சில்வா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106