அவுஸ்திரேலியாவை கடைசி டி20 யிலும் வென்றது பங்களாதேஷ்!
Tuesday, August 10th, 2021
அவுஸ்திரேலியாவை கடைசி டி20 ஆட்டத்தில் 62 ஓட்டங்களுக்கு சுருட்டிய பங்களாதேஷ் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பங்களாதேஷ், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி டி20 ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்த ஆட்டமும் குறைந்த ஸ்கோர் ஆட்டமாக அமைந்தது. இதனால், முகமது நயீம் 23 ஓட்டங்கள் எடுத்ததே பங்களாதேஷின் அதிகபட்ச ஓட்டமாக அமைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலிய தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் டேன் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகார், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
123 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களாக டேன் கிறிஸ்டியன் மற்றும் தலைவர் மேத்யூ வேட் களமிறங்கினர்.
அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக வேட் 22 ஓட்டங்களும், பென் மெக்டெர்மாட் 17 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் 10 ஓட்டங்களைக்கூட தொடவில்லை.
இதனால், அவுஸ்திரேலிய அணி 13.4 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பங்களாதேஷ் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், முகமது சயிஃபுதின் 3 விக்கெட்டுகளையும், நசும் அகமது 2 விக்கெட்டுகளையும், மகமதுல்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை பங்களாதேஷ் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106