இலங்கை – ருமேனியா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவு!
Tuesday, August 10th, 2021
இலங்கை – ருமேனிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பதானது இருநாட்டு நாடாளுமன்றங்கள் மற்றும் மக்களுக்கிடையில் காணப்படும் நெருக்கமான உறவுகளை மேலும் விருத்தி செய்வதற்கு உதவியாக அமைந்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை – ருமேனியா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 1957ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியே இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகியதாக சுட்டிக்காட்டிய சபாநாயகர், கொவிட்-19 தாக்கம் குறைவடைந்ததும் இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு மற்றும் கல்விச் சுற்றுலாக்களுக்கான வாய்ப்புக்கள் பல இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இச்சங்கத்தின் மறுமலர்ச்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே சபாநாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியூடியா மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல புதிய செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கோகிலா குணவர்த்தன ஆகியோர் உப தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி பொருளாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் ஹாசிம் துணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இதனிடையே முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மேலும் விருத்தி செய்யப்படும் என்றும், இது விடயத்தில் தூதுவரின் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை – ருமேனிய நாடாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106