கொரோனா தொற்றுறுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களுன் தொடர்புடையவர்களைத் தேடி நாடாளுமன்ற சிசிவிவி காணொளி பரிசோதனை!
Sunday, August 8th, 2021
கொரோனா தொற்று உறுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள சிசிரிவி காணொளி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்க ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சிக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்தவாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டிருக்கவில்லை.
அத்துடன் அவர்களுடன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புபட்டிருக்கவில்லை என இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகளின் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் உள்ள சிசிரிவி காணொளி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106