கோர விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர்! பயணித்த நால்வர் பலி !
Tuesday, August 3rd, 2021
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகொப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டுச் சென்றது.
சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் பயணம் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகொப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 33 பேர் பலி!
இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும் - உலக இந்துக் குழு இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!
வடக்கு காசா பகுதிக்கான உணவு விநியோகத்தை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு!
|
|
|


