மாகாணங்கள் இடையேயான பயணத்தடை எதிர்வரும் திங்கள்முதல் நீக்கப்பட வாய்ப்பு!!
Saturday, July 31st, 2021
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 02 மாதங்களாக அமுலில் இருந்துவருகின்ற மாகாணங்கள் இடையேயான பயணத்தடை வருகின்ற திங்கட்கிழமை முதல் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே 11 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையிலான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் மே மாதம் 30 ஆம் திகதிவரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் அந்த பயணக் கட்டுப்பாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றமை குறித்து இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பட்டம் சிக்குண்டதே நேற்றைய தினம் மின்சாரம் தடைப்பட்டதற்கு காரணம் - மின்சார சபையின் வடமாகாண முகாமை...
பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இராஜினாமா!
இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் - பொதுமக்களுக்கு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரிக்கை!
|
|
|


