வரும் மாதம் சேதன பசளை பயன்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் – விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!
Sunday, July 25th, 2021
எதிர்வரும் பெரும்போகத்தின்போது சேதன பசளை பயன்படுத்தும் முறைமை தொடர்பில் அடுத்த மாதம், முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயத்துறை அமைச்சின் புதிய செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பயிர் செய்கைகளுக்கு தற்போது பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் பசளைகள் தேவையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தேவைக்கு ஏற்ப அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயத்துறை அமைச்சின் புதிய செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மகிந்த தரப்புடன் பேச்சுக்கு இடமில்லையாம் மைத்திரி!
எதிர்வரும் திங்களன்று மாகாண சபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் !
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெ...
|
|
|


