பேருந்து விபத்தில் 20 பேர் காயம்!
Friday, August 12th, 2016
எம்பிலிப்பிடிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்றுஅதிகாலை(12) 4.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சூரியவெவயில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேரந்து ஒன்றும் பிலியந்தலையில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்களில் 11பேர் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
கிளிநொச்சிக்கு ஆளுநர் விஜயம், மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடல்
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்...
திருப்திகரமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை!
|
|
|


