ஜனாதிபதி உத்தரவு – பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை!
Sunday, July 18th, 2021
உடல்நலக்குறைவால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள், தமக்கான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்பதாக வீடுகளிலிருந்து வெளியேற முடியாதோருக்கு விரைவில் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி கடந்த 16 ஆம் திகதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்தே பொதுமக்களிடம் இந்த முக்கிய கோரிக்கையை இராணுவத்தளபதி முன்வைத்துள்ளார்.
வயோதிபர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை எனின், அவர்களுக்காக ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, நடமாடும் சேவைகளூடாக வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.வலிகாமம் கல்வி வலயத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 12 பாடசாலைகளை மீட்டுத் தர வேண்டும் -வடமாக...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி!
நேட்டோவிலிருந்த வெளியேறும் அமெரிக்கா - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
|
|
|


