5 தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இரத்து – விளையாட்டுத்துறை அமைச்சு!
Wednesday, July 14th, 2021
இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக இரத்து செய்துளதுடன் இதுதொடர்பான விசேட வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஜுடோ (Judo) சங்கம், இலங்கை ஸ்கிரப்பல் (Scrabble) சம்மேளனம், இலங்கை சர்பிங் (Surfing) சம்மேளனம் மற்றும் இலங்கை ஜுஜிட்சு (Jiu-jitsu) சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகள் இரத்தாகியுள்ளன.
இந்த அமைப்புகளுக்கு ஜூலை 1முதல் அமுலாகும் வகையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய உரிய அதிகாரம் பொருந்தியவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
நான் எடுத்த சபதம் இதுதான்: மனம் திறந்த சந்திமால்!
கோல் மழையுடன் வெற்றிக் கணக்கை தொடங்கியது ஊரெழு றோயல் அணி!
விராட் கோலி சதம்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 274 ரன்கள் !
|
|
|


