லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!
Saturday, July 10th, 2021
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ஹேமந்த ஹேரத் பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் பிறழ்விற்கான மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு நாட்டிற்குள் பரவாதிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிடாதது கல்வியமைச்சரின் இயலாமை - இலங்கை ஆசிரியர் சங்கம்!
இலங்கையில் தேசிய அடையாள அட்டை பாவனையில் புதிய நடைமுறை - ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவிப்பு!
கடும் எரிபொருள் நெருக்கடி - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அன...
|
|
|


