க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சார்த்திகள் இருவேறு கோரிக்கை முன்வைப்பு – நியாயமான தீர்மானமொன்று எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் எனினும், இந்த விடயம் குறித்து இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இம்முறை சுமார் 2 இலட்சம் மாணவர்கள், முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

அதேநேரம் குறித்த மாணவர்கள் தமக்கான பாடவிதானங்கள் உரிய முறையில் நிறைவு செய்யப்படாததால் பரீட்சையை பிற்போடுமாறும் கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டாவது தடவையாக உயர் தர பரீட்சையில் தோற்றும் சுமார் ஒரு இலட்சத்து 50,000 மாணவர்கள், பரீட்சையை பிற்போட வேண்டாம் என கோரியுள்ளனர்.

இதனால் இந்த விடயம் குறித்து நியாயமான தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளை ஆகஸ்ட் மாதத்தில் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைப்பற்றப்படும் ஹெரோயின் மீண்டும் சந்தைக்கு வரும் நிலை காணப்படுக...
உள்ளூராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை...
சீரற்ற காலநிலை - உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்க...

யாழ்ப்பாணம் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம் - வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள...
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் தொழிற்சங்க போராட்டம் துரதிஸ்டவசம...