அல்லைப்பிட்டியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
Thursday, July 8th, 2021
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டி வீதியில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய அரசியல் யாப்பில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முக்கித்துவம் - அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி!
அதிபர் சேவையைச் சேர்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
பணியாற்றும் நிறுவனம் திடீரென மூடப்பட்டால் ஊழியர்கள் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் - தொழில் அமைச்...
|
|
|


