சுகாதார விதிமுறைகளை மீறிய ஆயிரத்து 240 முச்சக்கர வண்டிகள் கண்டறியப்பட்டது!
Thursday, April 29th, 2021
முச்சக்கர வண்டிகள் தொடர்பாக நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது,தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,240 முச்சக்கரவண்டிகள் கண்டறியப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த தேடுதலில் நடவடிக்கையின்போது 6 ஆயிரம் 110 முச்சக்கர வண்டிகள் பரிசோதிக்கப்பட்டன. பல முச்சக்கரவண்டி சாரதிகள் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்
Related posts:
சாதாரணதர பரீட்சை மீள் ஆய்வு பெறுபேறுகள் வெளியாகின!
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!
நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரம் வீண் விரயமாக்கப்படுகின்றது - ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பி...
|
|
|


