அஞ்சலோ மத்தியூஸ் கோரிக்கை!

Thursday, July 8th, 2021

முன்னாள் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ்சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அஞ்சலோ மத்தியூஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரி ஒருவர், சர்வதேச போட்டிகளில் தற்காலிகமாக தனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்தியூஸ் கேட்டுள்ளதாக கூறினார்.

34 வயதான மத்தியூஸ் இலங்கைக்காக 90 டெஸ்ட் போட்டிகளிலும் 6,236 ஓட்டங்களையும், 218 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 5 ஆயிரத்து 635 ஓட்டங்களையும் 78 T20 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 148 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

அவர் தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியை 2008 இலும், முதல் டெஸ்ட் போட்டியை 2009 இலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106