யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராமம் தனிமைப்படுத்தலில்!
Tuesday, July 6th, 2021
நாட்டில் இன்றும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், ஒருபகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.
கொரோனா அதற்கமைய, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேல் பகுதியான தம்படி பிரதேசமும்
மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும்
களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட காவல்துறை அதிகாரப்பிரிவின் பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காவல்துறை அதிகாப்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர்- 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106