அரியாலை காரைமுனங்கு மயானத்தில் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு!
Sunday, July 4th, 2021
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தில் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளர்.
நல்லுர் பிரதேச சபைபின் ஆளுகைக்குற்பட்ட காரைமுனங்கு மயானத்தில் பிரதேச சபையினால் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் பிரதேச சபையினால் மயானங்களை அழகுபடுத்துவதாக கூறி இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால் மீண்டும் மீண்டும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளர்.
Related posts:
எமது மக்களின் பல மில்லியன் ரூபா பணத்தினைச் சுருட்டிக் கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது: வடமாகாண சபை...
நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை வெய்யும் - வளிமண்டலவியல் எதிர்வுகூறல்!
உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார் - நாமல் ராஜபக்ஷ!
|
|
|


