நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை வெய்யும் – வளிமண்டலவியல் எதிர்வுகூறல்!
Monday, October 10th, 2022
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிடண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்ததக்கது.
Related posts:
வடக்கின் கல்வியை முன்னேற்ற நடவடிக்கை - பிரதமர்!
இலங்கை – இந்திய உறவானது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தது - இலங்த்தீவின் 73 ஆவது சுதந்திர தின வாழ்த...
இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திர விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது பஹ்ரெய்ன்!
|
|
|


