சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுங்கள் – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் !
Sunday, July 4th, 2021
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கண்காணிக்கும் நிறுவனங்களுக்கு 15 வீதமான முறைப்பாடுகளே கிடைப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழ்நிலையில் வீடுகளிலும் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றன. இது பற்றிய தகவல்கள் உரிய வகையில் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை உரிய தரப்பிற்கு வழங்குமாறு சிறுவர் அதிகார சபையின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல்கலை மோதல் வழக்கு ஒத்திவைப்பு!
எம் மீது அபர்த்தமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன - அடியோடு நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ர...
உள்ளுர் சந்தையில் தேங்காய் விலை உயர்வு - தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|
|


