மைதானத்தில் 100% ரசிகர்களுக்கு அனுமதி!
Friday, July 2nd, 2021
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டத்தில் 100% ரசிகர்கள் அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை அன்றும் டி20 தொடர் ஜூலை 16 அன்றும் தொடங்குகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்டில் 70% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். நான்கு நாள் இடைவெளியில் 60,000 ரசிகர்கள் வருகை தந்தார்கள். பிர்மிங்ஹம்மில் நடைபெறவுள்ள இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் ஆட்டத்தில் 80% ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். அந்த ஆட்டத்துக்கு 19,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் ஆட்டத்தில் 100% ரசிகர்கள் அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் ஆரம்பித்த பிறகு இங்கிலாந்தில் அதிகம் பேர் நேரில் பார்த்த கிரிக்கெட் ஆட்டமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் செப்டம்பர் 2019 க்குப் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தை நேரில் காண வரும் 11 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்கள் – கொரோனா இல்லை என்கிற பரிசோதனை சான்றிதழ் அல்லது இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட சான்றிதழ் என இரண்டில் ஒன்றைக் காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106