கடலுக்கு சென்றவரை காணவில்லை – நெடுந்தீவில் சம்பவம்!

Friday, July 2nd, 2021

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர்ஸ்டார் மரியதாஸ் என்பவர் நேற்று வியாழக்கிழமை காலை, கடலுக்குச் சென்று இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரங்களை சேகரித்த மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அவரை தேடும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக உரிய தரப்பினருக்கு  அதனை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அடையாள அட்டை நடைமுறையை பின்பற்றுவது ஆபத்தானதானது - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
2030 இல் இலங்கையின் வயோதிபர் சனத்தொகை 21 வீதமாக ஆக அதிகரிக்கும் - முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவிப...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன களமிறக்கும் வேட்பாளரே வெற்றியடைவார் - முன்னாள் ஜனாதிபத...