22 ஆம் திகதி நாடாளுமன்றம் வருகின்றது 20 ஆவது திருத்தம்!
Friday, September 18th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்
முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பழைய பாலம் அகற்றி சீராக்கம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள் - என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமை...
அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த மேலதிக கொடுப்பனவாக 2,500 ரூப...
|
|
|


