கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி வர்த்தகர்களுக்கான அபராதம் – சட்டமூலம் சட்டமா அதிபருக்கு!
Friday, July 2nd, 2021
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிகரித்த விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் செயற்பாட்டை முற்றாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அண்மைக்காலமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Related posts:
விக்னேஸ்வரனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை - ஆனந்தசங்கரி!
மின் விநியோகத் தடை தொடரும் - மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!
தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்திற்காக நாளை - கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


