மின் விநியோகத் தடை தொடரும் – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!
Thursday, December 23rd, 2021
நாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிமுதல் இரவு 9.30 மணிவரை மின் விநியோகத் தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால் தகவல்களை வெளிப்படையாக கூறமுடியாது - ஏப்ரல் 21 தாக்குத...
டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் - கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான வழக்குத் தாக்கல் முறையாக மேற்கொள்ள...
|
|
|
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை - லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்...
யாழ்ப்பாணம் திருமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் - து...
பெப்ரவரியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5% அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!


