பாடசாலைகளில் எஸ்படொஸ் கூரைத்தகடு பயன்பாட்டை தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியிடவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் அறிவிப்பு!
Thursday, July 1st, 2021
பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கூரைகளுக்கு எஸ்படொஸ் கூரைத்தகடுகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் எஸ்படொஸ் கூரைத்தகடுகளை தடை செய்யும் வேலைத்திட்டத்தை கிரமமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கூரைகளுக்கு எஸ்படொஸ் கூரைத்தகடுகளை பயன்படுத்துவதை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில், கல்வி அமைச்சு உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்!
நீதிமன்றத்தில் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயற்சி..!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது!
|
|
|


