சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனுமதி!
Wednesday, June 30th, 2021
கொரோனா தொற்று நிலைமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று நிலைமையால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் துறைகளில் ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணிக் கொண்டு செல்வதற்காக சலுகை வழங்கும் நோக்கில் தொழில் வழங்குனர்கள், ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட செயலணி மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்காக அமைச்சரவை இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய அனைத்து ஊழியர்களுக்கும் பணி புரிவதற்காக சமமான வாய்ப்புக்களை வழங்கல், ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டுமாயின், இறுதியாக செலுத்தப்பட்ட மொத்த மாதாந்தச் சம்பளத்தின் 50 வீதம் அல்லது 14,500/= தொகையில் அதிக நன்மை கிட்டும் தொகையை வழங்கல் மற்றும் குறித்த சம்பளத்திற்காக தொழில் வழங்குனரால் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்குப் பணம் செலுத்தல், உலகளாவிய ரீதியில் சர்வதேச விமானப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், குறிப்பாக எமது நாட்டில் சுற்றுலாத் துறையை வழக்கமான வகையில் பேணிச்செல்ல இயலாததுடன், குறித்த துறையில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சலுகைகளை 2021 யூலை மாதம் தொடக்கம் 2021 டிசம்பர் மாதம் இறுதிவரைக்கும் மேலும் நடைமுறைப்படுத்தும் வகையில் தொழில் உறவுகள் அமைச்சர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106