ஒரு நாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை அணி தோல்வி!
Wednesday, June 30th, 2021
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 18 ஓட்டங்களைக் கொடுத்து, 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி, 186 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
அந்த அணி சார்பில் ஜோ ரூட்ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதற்கமைய முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106