வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Tuesday, June 29th, 2021

கடற்றொழில் அமைச்சிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் திட்டப் பணிப்பாளர் உட்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடனான குறித்த கலந்துலையாடலில், இவ்வாண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத் திட்டங்களை  விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளையும் கடற்றொழில் அமைச்சர், அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: