வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை – வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
Sunday, June 27th, 2021
தெஹிவளை மிருககாட்சிசாலையில் வேறு எந்த மிருகங்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் மற்றும் சீனா என்றழைக்கப்படும் பெண் சிங்கம் ஆகியன தற்போது குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிங்கத்திற்கு மேற்கொண்ட எக்ஸ்-கதிர் பரிசோதனையின்போது அதன் நெஞ்சு பகுதியில் சளி காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாளாந்தம் மிருகங்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் இதற்கான உரிய நடவடிக்கைகளை மிருககாட்சிசாலை திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!
யுக்ரைனுடனான மோதல் - உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!
தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதால் அடுத்து வரும் சில தினங்களுக்கு அதிக மழையுடன...
|
|
|


