நாடு வழமைக்கு திரும்பும்வரை சகல மதுபான சாலைகளையும் பூட்டுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
Thursday, June 24th, 2021
நாட்டில் கொரோனா தொற்று பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் வரும்வரையில் சகல மதுபான சாலைகளையும் பூட்டுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு அழுத்தமான கோரிக்கை விடுத்திருக்கின்றது.
மதுபானமானது ஒரு அத்தியாவசிய பொருள் அல்ல. அவற்றை கிடைக்கப் பெறச் செய்யக்கூடாது என சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் தெளிவான அறிவு அவசியம். எனவே மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Related posts:
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வர்த்தமானி!
சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவே செயற்படுகிறது - இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்க...
கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் - பிரதமர் தினேஷ் க...
|
|
|


