தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Wednesday, June 23rd, 2021
கடந்த 2 நாட்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணித்த 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார வழிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை அடையாளம் காண்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்றுமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் சிவில் உடை அணிந்த பொலிஸார் பொதுமக்களை போன்று பயணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீரியல் வளப் பண்ணை வட மாகாணத்திற்கு வர வாய்ப்பு!
பர்பெசுவல் ட்ரஷரீஸ் சட்டத்தரணி விலகினார்!
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கும் வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் - இலங்கையின...
|
|
|


