அச்சமின்றி கடலுணவுகளை உட்கொள்ள முடியும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 22nd, 2021

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முதற்கட்டமாக அதன் உரிமையாளர்களிடம் நஷ்ட ஈட்டை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. குறித்த நிதி அடுத்த இரு வாரங்களுக்குள் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று அகவை அறுபத்து மூன்று - தமிழ் மக்கள் தொடர்ச்சியான வாழ்த்த...
இரணைதீவில் பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் - அமைச்சர் டக்ளஸின் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்!
அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்த இலங...