உடனடியாக பாடசாலைகளை ஆரம்பிப்பது நடவடிக்கை ஆராய்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 21st, 2021

சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்தவுடன் உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் இது தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறார்கள் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களின் உயர்ந்தபட்ச சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு - திடீர் சோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா...
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்றுமுதல் குறைவடையும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவி...
ஏப்ரல் 21 தாக்குதல் -  அல்விஸ் குழு அறிக்கையை வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது - முன்னாள் ஜனாதிப...