தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!
Saturday, June 19th, 2021
தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிபுணத்துவ வைத்தியர் சுதத் சமரவீரவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுதத் சமரவீர டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளராக நிபுணத்துவ வைத்தியர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
தொற்று விஞ்ஞானப் பிரிவு சரியான தரவுகளை வெளியிடுவதில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வரும் நிலையில் இந்த அவசர இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாணத்தின் வளங்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து முதலீட்டாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் முதலீட்டா...
ரூபாவின் மதிப்பு வழமை நிலைமைக்கு!
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவி...
|
|
|


