இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு!
Friday, June 18th, 2021
இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
அத்துடன் குறித்த அதிர்வு ரிக்டர் அளவீட்டு கருவியில் 4.8 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல் பகுதியில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக நில அதிர்வு மற்றும் இயற்கை அனர்த்தம் தொடர்பில் தெளிவுபடுத்தும், வோல்கெனோ டிஸ்கவரி என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனினும், மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, ஏறாவூர் ஆகிய பகுதிகள் இந்த நில அதிர்வை உணரக்கூடிய பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும், குறித்த பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கூட்டு ரோந்து - இலங்கையின் கோரிக்கையை ஏற்றது இந்தியா!
மின்கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் விசேட குழு ஆய்வு!
கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - உள்நாட்டலுவல்கள்...
|
|
|
நாளை 7 மணி நேரம் ஊரடங்கு சட்டம் தளர்வு: யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடர்ந்தும் அமுலில் இரு...
ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் 300 இக்கும் அதிகமானோர் பலி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்தராஜபக்ச இரங்க...
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர...


