கொரோனா சிகிச்சைக்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை – உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!
Friday, June 18th, 2021
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ். கைத்தடி, பொரளை, ஹம்பாந்தோட்டை மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலைகளும் இவற்றில் அடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய 24 ஆயுர்வேத வைத்தியசாலைகளும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படுகின்ற வைத்தியசாலைகளாகும்.
குறித்த 28 வைத்தியசாலைகளிலும் 2 ஆயிரத்து 500 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக் கவசத்தை அணியாத 39 பேர் கைது - பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும...
நெல்லுக்கான நிர்ணய விலை வேண்டும் - கிளிநொச்சி விவசாயிகள் போராட்டம்!
|
|
|


