பெரும்போகத்திற்கு முன்னர் சேதன பசளையினை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
Thursday, June 17th, 2021
எதிர்வரும் பெரும்போகத்திற்கு முன்னர் சேதன பசளையினை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் விவசாய இணைகுழு நேற்று முன்தினம் கூடியது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இரசாயன உர மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் கனிந்துள்ளது. ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதற்கு நஞ்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதற்காக சேதன பசளையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் சேதன பசளையின் பயன்பாட்டின் மூலம் விளைச்சலை அதிகரிப்பது தொடர்பில் விவசாயிகளை தெளிவூட்டும் முறைமை ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2016ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இருவாரத்தில் வெளிவரும்!
சாக்கடல் உருவாகும் ஆபத்து – இலங்கையை எச்சரிக்கும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்!
கொரோனா ஒழிப்பிலிருந்து வெளியேறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!
|
|
|


