ஓட்டமாவடியில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கல் முன்னெடுப்பு!
Saturday, June 12th, 2021
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனையிலுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறுபது வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தங்களது உயிரினை கொடிய கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளவும். இந்த தடுப்பூசி தொடர்பில் ஏதும் சந்தேகங்கள் இருப்பின் தடுப்பூசி நிலையத்தில் உள்ள வைத்தியரை அல்லது பொது சுகாதார பரிசோதகரை அனுகி இது தொடர்பான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும் என இதன்போது ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106