கொக்குவில் பகுதியில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் விசேட சோதனை நடவடிக்கை!
Friday, June 11th, 2021
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ் குடாநாட்டில் பயணத் தடையை மீறி வீதிகளில் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண பொலிசாரால் தொடர்ந்து விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் பொலிசாரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
Related posts:
ஒக்டோபர் மாத இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் !
இலங்கையின் துறைமுகத்திற்கு 25 ஆவது இடம்!
அஸ்வெசும 2 ஆம் கட்ட விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
|
|
|


