பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் – நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை!
Thursday, June 10th, 2021
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச் செலவு குழு நேற்று கூடியதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்குமாறு நேற்று நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இவ்வாறான சூழ்நிலையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்காது மாற்று வழிகளை கையாளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெண் அரச உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மணல் கொள்ளையர்கள்!
23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் பங்கேற்புடன் இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு ...
மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷ...
|
|
|


