விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
Monday, July 11th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு சட்டத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வான் படையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வான்படை அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மத்தியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மேலோங்கியுள்ளது. குறிப்பாக தீவிரவாதிகளின் தாக்குதல் அண்மையில் அதிகரித்துள்ளது.
அத்துடன், அண்மைய நாட்களில் தீவிரவாதிகள் ஆசிய நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டு வருக்கின்றனர்.எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தலை நீக்கிகொள்வதற்காக இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
10ஆது நாளாக இன்றும் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு!
தேர்தல் தொடர்பில் 4 முறைபாடுகள் - காவற்துறைத் தலைமையகம்!
கொரோனா தொடர்பில் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆவத...
|
|
|


