கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்தல்!
Thursday, June 10th, 2021
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சிறிபவானந்தரராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை 021 221 4249 / 021 222 2261 / 021 222 3348 என்ற தெலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்கள் பெயர் , கிளினிக் இலக்கம், முழுமையான விலாசம், தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் என்பவற்றை அறியத்தந்தால் குறித்த மருந்துகள் தபால் ழூலமாக எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளர்கள் வசதி கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் மேலும் 021 222 2268 / 021 315 2921 ஆகிய இரண்டு நேரடி தொலைபேசி இலக்கங்கள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பதில் பணிப்பாளர் சிறிபவானந்தரராஜா நோயாளர்களை பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106