கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Thursday, June 10th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இன்றையதினமும் நாட்டின் பல இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை அடையாளம் காண்பதற்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் போதைப் பொருட்களுடன் கைதாகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
காபன் வரித் திட்டத்துக்கு கிளம்பியது பெரும் எதிர்ப்பு!
ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படாது – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது - தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
|
|
|


