மலையகத்தில் கடும் மழை – நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

Wednesday, June 9th, 2021

சில வாரங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் கடும் மழை பெய்து வருகிறது.

நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து சில நீர்த்தங்களில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கெனியோன், லக்ஷபான ஆகிய இரு நீர்த்தேக்கங்களில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், விமலசுரேந்திர நீர் தேக்கத்தில் நீர் வான் பாய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

இதனால் இந்த நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் காசல் ரீ நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளதுடன் மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீர் மட்டமும் கனிசமான அளவு உயர்ந்துள்ளன.

குறித்த நீர்த்தேக்கங்களின் நீரினை பயன்படுத்தி உச்ச அளவு மின் உற்பத்தி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படகின்றது.

அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

இதனால் மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும் அருகாமையில் வாழும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் மண் சரிவு அபாயம் காணப்பட்டால் அவ்விடங்கள் இருந்து ஒதுங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயமும் ஏற்பட்டுள்ளன.

எனவே இந்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106