கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 913 பேர் கைது – பொலிஸ் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்திற்கு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சோதனைகள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்போது 2 ஆயிரத்து 348 வாகனங்களில் பயணித்த 4 ஆயிரத்து 504 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக 54 வாகனங்களில் பயணித்த 107 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:


தனியார் துறையில் 15 இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் – கொரோனா அச்சுறுத்தலின் விழைவு என எச்சரிக்கின்...
மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துங்கள் – துறைசார் ...
தடுப்பூசி செலுத்துகை நிறைவடைந்த பின்னரான, கொரோனா பரவும் நிலை குறித்து விசேட வைத்தியர்கள் குழுவொன்றை...