எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கருப்புப் பெட்டி மீட்பு – எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவொன்று தயாராக உள்ளதாகவும் அறிவிப்பு!

Sunday, June 6th, 2021

கொழும்பு துறைமுகமருகே அனர்த்தத்திற்குள்ளான நிலையில் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புப் பெட்டி, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமுள்ள கறுப்பு பெட்டி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரண்டு நாட்களில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கப்பலிலுள்ள எரிபொருள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை, கப்பல் மீட்பு நிறுவனத்தின் கெப்டனுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலினால் கடல், சுற்றுச்சூழல், கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகைள முன்னெடுக்குமாறு அறிவித்துள்ளதாகவும் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கப்பலிலிருந்து கரையொதுங்கிய சிதைவுகளுடன் கூடிய சுமார் 40 கொள்கலன்கள் மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே அண்மையில் கரையொதுங்கிய ஆமை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயனம் காரணமாகவா உயிரிழந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை கூறியுள்ளது.

இதற்காக உயிரிழந்த ஆமையின் மாதிரிகள் பேராதனை மிருக வைத்திய பீடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவொன்று தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓஎஸ்ஆர்எல் என்ற நிறுவனம் எக்பிரஸ்பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய் கழிவு ஏற்பட்டால் அனை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐடிஓபிஎவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதாக ஓஎஸ்ஆர்எல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எக்பிரஸ்பேர்ள் கப்பலில் இருந்து இரசாயனங்கள் பிளாஸ்டிக் உட்பட ஏனைய பொருட்கள் அழிந்துபோனமை குறித்து ஐடிஓபிஎவ் ஆலோசனை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106