நாட்டில் ஒட்சிசன் தேவைப்பாடு அதிகரித்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!
Friday, June 4th, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்தவரும் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் ஒட்சிசன் தேவைப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக அரச மருத்துவ அதிகரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரத்தினசிங்கமே இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது என்றும் அவர் சுட்டிக்கதட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பணிப்பெண்ணாக சென்ற சகோதரியை மீட்டுத் தாருங்கள்!
தரச் சான்றிதழ் அற்ற மருந்து வகைகள் தொடர்பில் விசாரணை வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
அமெரிக்காவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது - புடின்!
|
|
|


